லடாக்: லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை மாலை தௌலத் பேக் ஓல்டி பகுதியில் ராணுவ டேங்க் விபத்துக்குள்ளானதில் ஒரு இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர்.
ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே டி-72 ரக ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. அப்போது நீர் மட்டம் திடீரென அதிகரித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில், டேங்கரில் இருந்த இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் இருந்தனர். ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடந்து வருவாதாக” பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.
