Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

48 பெண்கள் மீட்பு.. பணத்திற்காக பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
48 பெண்கள் மீட்பு.. பணத்திற்காக பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம்பேட் பகுதியில் பெண்கள் விடுதி என்ற பெயரில், சட்டவிரோத கருமுட்டை சேகரிப்பு நடைபெறுவதாக போலீசாருக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மல்காஜ்கிரி சிறப்பு நடவடிக்கைக் குழு போலீசாரும், பேகம்பேட் போலீசாரும் இணைந்து பிரகாஷ் நகர் பகுதியில் உள்ள அமி நீதா பெண்கள் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு தங்கியிருந்த உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநில பெண்களிடம் விசாரணை நடத்தினர். அதில் பணத்திற்காக பெண்களின் கருமுட்டையை எடுத்து விற்று வந்த அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதனால் அதன் பின்னணியில் இருப்பது யார்? என கண்டறிய பேகம்பேட், எர்ரகட்டா, சரூர்நகர், கோபால்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கருமுட்டை விற்றதாக மொத்தம் 48 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலின் முக்கிய ஒருங்கிணைப்பாளராகச் சந்தேகிக்கப்படும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சர்மா, அவரது கூட்டாளி நிகாத் பர்வீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பிரகாஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பை மாதம் 50 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதி என்ற பெயரில் பெண்களிடம் இருந்து கருமுட்டையை எடுத்து வந்துள்ளனர்.

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்த பெண்களை இடைத்தரகர்கள் மூலம் ஹைதராபாத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஒரு கருமுட்டை தானச் சுழற்சிக்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரை வழங்குவதாகக் கூறி, அவர்களை கருத்தரிப்பு சிகிச்சை நடைமுறைகளுக்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து கைதானவர்களை தனித்தனியாக வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் Humog HP ஹார்மோன் ஊசிகள், சிரிஞ்சுகள், ஊசிகள், Primolut மற்றும் Meprate மாத்திரைகள், ஆவணங்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருமுட்டை எடுக்க பெண்களுக்கு முறையான மருத்துவக் கண்காணிப்பு இருந்ததா, மருந்துகள் உரிய மருத்துவ மேற்பார்வையுடன் வழங்கப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மருத்துவப் பொருட்களும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுக்கு ஹைதராபாத்தில் உள்ள சுமார் 23 IVF மற்றும் கருத்தரிப்பு மையங்களுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஆந்திர ஸ்ருஷ்டி பெர்டிலிட்டி சென்டர் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பங்கஜ் சோனியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபர். விசாரணையில் முடிவில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! – கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp

Next Post

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா; திமுக கொண்டாட்டம்; லட்டுகளை தட்டோடு பறிமுதல் செய்த போலீஸ்/ Pudukkottai Bus Stand Opening: Police Seize Laddus During DMK Celebration

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா; திமுக கொண்டாட்டம்; லட்டுகளை தட்டோடு பறிமுதல் செய்த போலீஸ்/ Pudukkottai Bus Stand Opening: Police Seize Laddus During DMK Celebration

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா; திமுக கொண்டாட்டம்; லட்டுகளை தட்டோடு பறிமுதல் செய்த போலீஸ்/ Pudukkottai Bus Stand Opening: Police Seize Laddus During DMK Celebration

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In