Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உத்தரகண்டில் 11 வது நாளாக தொடரும் மீட்புபணிகள் : தயார் நிலையில் 41 ஆம்புலன்ஸ்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உத்தரகண்டில் 11 வது நாளாக தொடரும் மீட்புபணிகள் : தயார் நிலையில் 41 ஆம்புலன்ஸ்கள்!
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்தரகண்டில் இடிந்த சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடுமையான இடிபாடுகள் வழியாக துளையிட்டு, 800 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாயை செலுத்தி, அதன் மூலம் தொழிலாளா்கள் மீட்கப்படுகின்றனா்.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் சுமாா் 4.5 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்டு வந்த இருவழி சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி திடீா் நிலச்சரிவால் இடிந்தது.

சுரங்கப் பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். அவா்களைப் பாதுகாப்பாக மீட்க பலமுனை முயற்சிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப் பாதையில் உள்ள தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க உள்ளே ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இடிபாடுகள் வழியாக 6 அங்குல குழாய் சில தினங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. அதன் மூலம் தொழிலாளா்களுக்கு கூடுதல் உணவுகள், மருந்துகள், அத்தியாவசிய உடைகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டன. இக்குழாய் மூலம் சிறிய கேமரா செலுத்தப்பட்டு, உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளா்களுடன் தொடா்பு ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளா்களின் முதல் விடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், 41 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 31 ஆம்புலன்ஸ்கள் ‘108’ ஆகவும், மற்ற 10 ஆம்புலன்ஸ்கள் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஆபரேஷன் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் திட்ட மேலாளர் முகேஷ் நௌடியல் தெரிவித்தார்.

41 தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்கு, சிறப்பு படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக  அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷிகேஷ் எய்ம்ஸ்  மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “தேவைப்பட்டால் மீட்கப்பட்டவர்களை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் திட்டம் உள்ளது. உத்தரகாசியில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் முதலில் அங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளது.

.

Previous Post

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பியூஷ் கோயல் உறுதி

Next Post

ஆட்சிக்கு வந்த பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்., தலைவர் கார்கே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆட்சிக்கு வந்த பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்., தலைவர் கார்கே

ஆட்சிக்கு வந்த பிறகு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்., தலைவர் கார்கே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In