Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜிஎஸ்டி அதிகாரிகளை காரில் கடத்திய 4 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஜிஎஸ்டி அதிகாரிகளை காரில் கடத்திய 4 பேர் கைது
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சோதனைக்குச் சென்ற ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று காரில் கடத்தப்பட்டனர். போலீஸார் அவர்களை மீட்டு, 4 பேரை கைது செய்துள்ளனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், சரூர் நகரில் உள்ள சில கடை உரிமையாளர்கள் சரிவர ஜிஎஸ்டி செலுத்துவதில்லை என புகார்கள் எழுந்தன. இந்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக சரூர் நகரில் உள்ள சாய் கிருஷ்ணா நகருக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறையின் மணிசர்மா, ஆனந்த் என்ற இரு அதிகாரிகள் நேற்று சென்றனர். இவர்கள் அங்குள்ள 2 இரும்பு கடைகளில் கணக்குகளை தணிக்கை செய்ய முயன்றனர். அப்போது சிலர் அவர்களின் அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டு அவர்களை தாக்கினர். மேலும் இருவரையும் ஒரு காரில் கடத்திச் சென்றனர். பிறகு இவர்களை விடுவிக்க ரூ.5 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக மணிசர்மா ரகசியமாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் மணி சர்மாவின் செல்போன் சிக்னல் மூலம் அவர்களை பின்தொடர்ந்தனர். ராஜீவ் கூட்டு ரோடு அருகே அந்த காரை மடக்கிப் பிடித்து 2 அதிகாரிகளையும் விடுவித்தனர். அவர்களை கடத்திச் சென்ற 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

.

Tags: அதகரகளகடததயகதகரலபரஜஎஸட
Previous Post

திருச்செந்தூரில் திடீரென நடந்த வினோதம்.. திகைத்து போன பக்தர்கள்.. அப்படியே மாறிய காட்சிகள்

Next Post

Tiruppur: திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி சிறுமி பலி ஓட்டுநருக்கு சரமாரி அடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tiruppur: திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி சிறுமி பலி ஓட்டுநருக்கு சரமாரி அடி

Tiruppur: திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி சிறுமி பலி ஓட்டுநருக்கு சரமாரி அடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In