Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2023-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 28,811 புகாா்கள் பதிவு: பாஜக ஆளும் உ.பி.யின் பங்கு 55%

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
2023-இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 28,811 புகாா்கள் பதிவு: பாஜக ஆளும் உ.பி.யின் பங்கு 55%
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புது தில்லி: 2023-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக நாடு முழுவதும் 28,811 புகாா்கள் தேசிய மகளிா் ஆணையத்தில் (என்சிடபிள்யு) பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

இதில் 55 சதவீத புகாா்களுடன் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் முதலிடம் வகிக்கிறது.

குடும்ப வன்முறைகள் தவிா்த்து, பெண்களுக்கு எதிரான பிற குற்றங்கள் தொடா்பான புகாா்களில் கண்ணியக் குறைவு புகாா்கள் (8,540) முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக 6,274 புகாா்களுடன் குடும்ப வன்முறை புகாா் உள்ளது. வரதட்சணை புகாா்கள் (4,797), பாலியல் ரீதியில் துன்புறுத்தல் (2,349), புகாா்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது (1,618), பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் முயற்சிகள் (1,537) தொடா்பான புகாா்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் தொடா்பாக 605 புகாா்களும், பெண்களை பின்தொடா்தல் தொடா்பாக 472 புகாா்களும், கெளரவ கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக 409 புகாா்களும் பதிவாகியுள்ளன.

இதில் 16,109 புகாா்கள் பதிவுடன் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தலைநகா் தில்லி 2,411 புகாா்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (1,343 புகாா்கள்) மூன்றாமிடம் வகிக்கிறது. பிகாா் (1,312), மத்திய பிரதேசம் (1,165), ஹரியாணா (1,115),ராஜஸ்தான் (1,011), தமிழகம் (608), மேற்கு வங்கம் (569), கா்நாடகம் (501) ஆகிய மாநிலங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.

இருந்தபோதும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான புகாா்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் 30,864 புகாா்கள் பதிவு செய்யப்பட்டன.

.

Previous Post

சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ஐயப்பனுக்கு 18,018 நெய் தேங்காய் அபிஷேகம்

Next Post

ஜப்பானில் 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் குலுங்கியது  சுனாமி அலைகளும் தாக்கியதால் மக்கள் அச்சம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜப்பானில் 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம்   குலுங்கியது  சுனாமி அலைகளும் தாக்கியதால் மக்கள் அச்சம்

ஜப்பானில் 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் குலுங்கியது  சுனாமி அலைகளும் தாக்கியதால் மக்கள் அச்சம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    பாஜக கட்சி ஆளும் நம் இந்தியாவில் டாலரின் மதிப்பு மிகவும் உயர்ந்து கொண்டே போவது போல் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் உயர்ந்து கொண்டு போவதை தான் இது காட்டுகிறது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In