வேண்டாம், தயவு செய்து, வேண்டாம் என்று கெஞ்சி முழங்காலில் கீழே மண்டியிட்டு கைகளை மடக்கி கெஞ்சியும் முடி வெட்டுவதற்காக வந்தவர் தலையில் பல முறை சுடப்பட்டு இறந்தார். இவை அனைத்தும் சிசிடிவி வீடியோவாக பதிவாகியுள்ளது.
தென்மேற்கு டெல்லியின் நஜாப்கரில் உள்ள சலூனில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்திய இருவர் தப்பி ஓடியதை வீடியோவில் காணமுடிகிறது.
சோனு மற்றும் ஆஷிஷ் என அடையாளம் காணப்பட்ட 30 வயது மதிப்பு மிக்க நபர்கள் மற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னிலையில் சுடப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல் நடத்திய இருவர் தப்பியோடிவிட்டனர்.
இந்த வழக்கு தனிப்பட்ட விரோதம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள், ஆனாலும் இரு கும்பல்களுக்கிடையே நடந்த சண்டையாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய டெல்லி காவல்துறையால் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

