Saturday, November 21, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்… கிறிஸ்தவர் – இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2026
in அரசியல் செய்திகள்
0
16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்… கிறிஸ்தவர் – இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆணுக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே 2009-ம் ஆண்டு நடைபெற்ற திருமணப் பதிவு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் இரு இந்துக்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

2009-ல் நடந்த திருமணப் பதிவு… என்ன நடந்தது?

சென்னையைச் சேர்ந்த நவீன் குமார், விக்னேஸ்வரி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த 2009 பிப்ரவரி 20-ம் தேதி சென்னை மத்திய மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் திருமணப் பதிவு நடைபெற்றது. ஆனால், தான் திருமணத்துக்குச் சாட்சியாக கையெழுத்திடவே சென்னைக்கு வந்ததாகவும், தன்னையும் விக்னேஸ்வரியையும் திருமணமானவர்களாகப் பதிவு செய்துவிட்டதாகவும் நவீன் குமார் தெரிவித்தார்.

தான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், இருவரும் திருமணத்துக்குப் பிறகு கணவன் – மனைவியாக வாழவில்லை என்றும் கூறிய அவர், இந்தத் திருமணப் பதிவு செல்லாது என அறிவிக்கக் கோரி 2010-ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருமணம்

ஆனால், நவீன் குமார் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதற்கான ஆதாரங்கள் நம்பகமானவை அல்ல என்றும், திருமணத்துக்காக அவர் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறுவதற்கு ஆதாரமில்லை என்றும் கூறி 2019-ல் குடும்ப நல நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பெயரை வைத்து மதத்தைத் தீர்மானிக்க முடியாது!

நவீன் குமார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு திருமுழுக்கு (Baptism) சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், அவர் வெவ்வேறு ஆண்டுகளில் இரண்டு முறை ஞானஸ்நானம் பெற்றிருந்ததை முரண்பாடாகக் கருதி, குடும்ப நல நீதிமன்றம் அவரது மத அடையாளத்தை ஏற்கவில்லை.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கிறிஸ்தவ மதத்தில் ஒருவர் வேறு பிரிவுக்கு மாறும்போது மீண்டும் ஞானஸ்நானம் பெறுவது வழக்கமாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டது. மேலும், ஒருவருடைய பெயரை வைத்தோ, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற அரசு ஆவணங்களை வைத்தோ அவருடைய மதத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

நவீன் குமார் கிறிஸ்தவர் என்பதற்கான ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திருமணப் பதிவு நடைபெற்றபோது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது.

இந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்தால் செல்லுமா?

இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act) 1955-ன் பிரிவு 5-ன்படி, இந்து மதத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே அந்தச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள முடியும். பிரிவு 8-ன் கீழ் திருமணப் பதிவு என்பது ஏற்கெனவே சட்டப்படி நடைபெற்ற திருமணத்தைப் பதிவு செய்வதற்கான நடைமுறைதான்; வெறும் பதிவால் மட்டுமே திருமணம் செல்லுபடியாகிவிடாது.

இந்த வழக்கில், திருமணச் சடங்கு எதுவும் நடைபெறவில்லை என்பதை எதிர்மனுதாரரான பெண்ணும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இருவரும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் (Special Marriage Act) கீழும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட இந்தப் பதிவு சட்டப்படி செல்லாது என நீதிமன்றம் தீர்மானித்தது.

உயர்நீதிமன்றம்

திருமணப் பதிவாளர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கில் திருமணப் பதிவின்போது மதம் தொடர்பான விவரங்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததையும், திருமணத்தை நடத்தி வைத்தவர் தொடர்பான முழுமையான விவரங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் விடுபட்டிருந்ததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு செல்லாத திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்தத் தீர்ப்பின் நகலைப் பதிவுத்துறைத் தலைவருக்கு (IG of Registration) அனுப்ப உத்தரவிட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திருமணப் பதிவாளர்களுக்கு இதை அனுப்பி, சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

கிறிஸ்தவர் – இந்து போன்ற வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தை மாற்றாமல் திருமணம் செய்துகொள்ள, சிறப்புத் திருமணச் சட்டம் 1954-ன் கீழ் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.



.

Previous Post

பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?- நீதிபதி கேள்வி | “If Perumal Murugan could identify fake books, why couldn’t you?” – Judge’s question

Next Post

திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய `குப்பை மலை’ – அகற்ற கோரும் மக்கள்!| tirupattur-garbage-heap-national-highway-people-demand-removal

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய `குப்பை மலை’ – அகற்ற கோரும் மக்கள்!| tirupattur-garbage-heap-national-highway-people-demand-removal

திருப்பத்தூர்: தேசிய நெடுஞ்சாலையில் தோன்றிய `குப்பை மலை' - அகற்ற கோரும் மக்கள்!| tirupattur-garbage-heap-national-highway-people-demand-removal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In