Jobs oi-Nantha Kumar R
Published: Friday, June 16, 2023, 6:10 [IST]
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசின் கார்டைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்பட உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ஆயுத தொழிற்சாலையின் கீழ் இந்தியாவில் கார்டைட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் கார்டைட் தொழிற்சாலை உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் கார்டைட் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.ரசாயன செயல்முறைக்கான பணியாளர் (Chemical Process Worker) என்ற அடிப்படையில் தான் இந்த 150 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கூறப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் வருமாறு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் என்சிவிடி சார்பில் வழங்கிய என்ஏசி/என்டிசி சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. வயது என்பது 2023 ஜூன் மாதம் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். மேலும் டிஏவும் வழங்கப்படும். இருப்பினும் இது ஒரு தற்காலிக பணியாகும். முதலில் ஒரு ஆண்டும், தேவையென்றால் பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம். விண்ணப்பம் செய்வோர் என்சிவிடி மதிப்பெண், டிரேட் தேர்வு( Trade Test)/ செய்முறை தேர்வு (Practical test) மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் https://cordite.co.in/சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamil Nadu PIn – 643 202 என்ற முகவரிக்கு வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here பணிக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய Click Here ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சம்பளம் எவ்வளவு? அவரது பணிகள் என்ன? முழுமையான தகவல்கள் டிகிரி போதும்.. தமிழக வனத்துறையில் டேட்டா என்ட்ரி, டெக்னீக்கல் அசிஸ்டென்ட் வேலைவாய்ப்பு.. ரெடியா? பெண்களுக்கு மட்டும்.. மாதம் ரூ.32,000 சம்பளம்.. குவைத்தில் வேலை வேண்டுமா? தமிழக அரசு முக்கிய தகவல் புறப்பட்டது புது இளைஞர்கள் படை! 1,425 பேருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்! என்ஜினீயரிங் பட்டதாரியா நீங்க.. மத்திய அரசில் சூப்பர் வேலை.. மாதம் ரூ.71 ஆயிரம் சம்பளம்.. ரெடியா? “பிளஸ் 2” படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை! மாதம் ரூ.35,000 சம்பளம்.. விண்ணப்பிக்க ரெடியா? நோ எக்ஸாம்! ரயில்வேயில் அசத்தலான வேலை.. என்ஜினீயரிங், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களே ரெடியா? நோ எக்ஸாம்.. இன்டர்வியூ மட்டுமே.. மாதஊதியம் ரூ.43,000.. ஈரோடு ஆவினில் சூப்பர் வேலைவாய்ப்பு ரூ.81,000 மாதசம்பளம்.. டிகிரி, டிப்ளமோ முடித்தாலே போதும்.. உளவுத்துறையில் சூப்பர் வேலை! ரெடியா? தேர்வு இல்லை! நேர்க்காணல் மட்டுமே! மாதஊதியம் ரூ.43,000.. திருப்பத்தூர் ஆவினில் அசத்தலான வேலைவாய்ப்பு சஸ்பென்ஸ்.. கோர விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்! பதிவு செய்த 101 தமிழர்கள் – கணக்கு இடிக்குதே புல்லட் ரயிலே ஓட்டுறாங்களே.. விபத்தை தடுக்க ஜப்பான், அமெரிக்கா என்ன செய்கிறது தெரியுமா?
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Cordite factory is functioning at Aruvankadu in Nilgiris. A notification has been issued to fill 150 vacant posts in this factory. Candidates who have completed 10th standard can apply for this job.
Story first published: Friday, June 16, 2023, 6:10 [IST]

