Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" – டிடிவி தினகரன் காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2026
in அரசியல் செய்திகள்
0
“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" – டிடிவி தினகரன் காட்டம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி சிறுமியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் 12-ம் தேதி அதிகாலை சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுமியைத் தேடும் பணிக்காக 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுமி மாயம்
சிறுமி மாயம்

எனினும், சிறுமி மாயமாகி 10 நாள்கள் கடந்தும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவலோ, முக்கிய தடயமோ கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “செஞ்சி அருகே சிறுமி மாயமாகி பத்து நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்காமல் திணறும் தமிழ்நாடு காவல்துறை – குற்றங்களைக் கையாளுவதில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, தற்போது அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதற்கான ஏவல்துறையாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டு நடுப்பட்டு பகுதியில் கடந்த 11ஆம் தேதி மாயமான 7 வயது சிறுமியைக் காவல்துறையினரால் பத்து நாட்கள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. சிறுமி மாயமானது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் தேடியும் சிறிய அளவிலான துப்புகூடக் கிடைக்காமல் காவல்துறையினர் திணறிக்கொண்டிருப்பது, காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்குகிறது.

விஜய்
விஜய்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஏவல்துறையாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் மீதும் அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதும் தேவையற்ற வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் தவெக அரசால், தமிழகக் காவல்துறை படிப்படியாகச் செயலிழந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுமட்டுமல்லாது, விழுப்புரம் அருகே 7 வயது சிறுமியைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகிப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் எனத் தமிழகத்தில் சிறுமிகள் தொடர்பான கடத்தல் மற்றும் மாயமாகும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில், இவற்றின் பின்னணியில் ஏதேனும் கும்பல்கள் செயல்படுகின்றனவா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுமி மாயமானது தொடர்பான விசாரணையில் தமிழகக் காவல்துறை திணறி வருவதாலும், அடுத்தடுத்த சிறுமிகள் கடத்தல் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையிலும், இவ்விசாரணைகளை சிபிசிஐடி (CBCID) அல்லது சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“பிடித்ததையும் வாங்குவேன்… முதலீடும் செய்வேன்!’’ – இன்றைய இளைஞர்களின் புதிய பண கலாசாரம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

டெல்லியில் ராவண வத நிகழ்ச்சி.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி பங்கேற்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நூடுல்ஸ் இல்லை, டீ இல்லை.. 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெளியான உண்மை.. நொய்டாவை உலுக்கிய சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நூடுல்ஸ் இல்லை, டீ இல்லை.. 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெளியான உண்மை.. நொய்டாவை உலுக்கிய சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

நூடுல்ஸ் இல்லை, டீ இல்லை.. 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெளியான உண்மை.. நொய்டாவை உலுக்கிய சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In