Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
'முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?' – ஆவேசமான மேயர் பிரியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, ‘முதல்வரின் கூட்டங்கள் குறித்து தனக்கு சொல்லப்படுவதே இல்லை’ என ஆவேசமடைந்தார்.

மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்

துணை மேயர் மகேஸ் குமார் பேசுகையில், ‘சைதாப்பேட்டை தொகுதியில் ஒரு பூங்கா புனரமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார். மண்டலக் குழு தலைவருக்கும் வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவே இல்லை.

அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்’ என்றார். உடனே கவுன்சிலர்கள் பலரும் எழுந்து எங்கள் வார்டுகளிலும் இதே நிலைமைதான். அரசு நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பதே இல்லை. ஆணையர் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.

மேயர்
மேயர்

உடனே மேயர் பிரியா, ‘கவுன்சிலர்களுக்கு மட்டும் இல்லை. எனக்கே அந்த நிலைமைதான். முதல்வர் ரிப்பன் பில்டிங்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால், வெளியில் முதல்வரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்திகள் வருகிறது. முதல்வர் வருகிறார் என்றால் எத்தனை மணிக்கு வருகிறார் என சொல்ல வேண்டாமா? முதல்வர் வருகிறார் என்பதற்காக இரவு வரை காத்திருக்க வேண்டுமா?

கவுன்சிலர்கள் மக்களின் குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு ஒரு வேலையை செய்தால் அதை எம்.எல்.ஏக்கள் வந்து திறந்து வைப்பதா? எம்.எல்.ஏக்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். நாங்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க விருப்பமில்லையெனில் மாநகராட்சியை கலைத்து விடுங்கள்’ எனக் கோபமடைந்தார்.

அடுத்ததாக பேசிய துணை மேயர், ‘பிரதமரின் நிகழ்ச்சிக்கு மேயருக்கு அழைப்பு வந்தது. அங்கே அவர் சென்றார். முதல்வரின் நிகழ்ச்சிக்கும் அழைத்தால் மரபுப்படி மேயர் வருவார்’ எனக் கூறினார்.



.

Previous Post

வேலூர் திமுக மாவட்டச் செயலாளர், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் ரெய்டு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி! | vigilance surprise raid at the residence of vellore dmk district secretary and businessman sekar reddy

Next Post

“நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் 10 லட்சம் பேர் கூடுவார்கள்” – காங்கிரஸ் உ.பி. பொறுப்பாளர் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் 10 லட்சம் பேர் கூடுவார்கள்” – காங்கிரஸ் உ.பி. பொறுப்பாளர் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

“நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் 10 லட்சம் பேர் கூடுவார்கள்” – காங்கிரஸ் உ.பி. பொறுப்பாளர் நம்பிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In