Last Updated:
பிரதமர் நரேந்திர மோடியை விவாதிக்க அழைப்புவிடுத்த ராகுல் காந்திக்கு பாஜக பதில் கொடுத்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இதே சமயத்தில் அடுத்த ஆண்டு பஞ்சாப் தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று காங்கிரஸ் தரப்பில் அங்கு நீதி பேரணி எனும் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியையும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரீவாலையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்திய அளவில் பாஜகவை எதிர்க்க பல்வேறு கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தாலும், மாநிலங்கள்வாரியாக பல மாநிலங்களிலும் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுடன் இணையாமல் இருப்பதும் கடும் விமர்சனங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்திவருகிறது.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை நேரடி விவாதத்திற்கும் ராகுல் காந்தி அழைப்புவிடுத்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்.பி. சம்பித் பத்ரா, “ராகுல் காந்தி முதலில் இந்தியா கூட்டணியுடன் ஒற்றுமையாக இருக்கிறீர்களா அல்லது தனித்து இருக்கிறீர்களா? என்பது குறித்து விவாதிக்கட்டும்” என பதில் கொடுத்துள்ளார்.
#WATCH | Bengaluru, UP: BJP MP Sambit Patra says, “…Recently, all the members of the so-called ‘INDI alliance’ gathered at Ramlila Maidan. They claimed that 10 lakh would assemble there, but in reality, there were no more than 20,000 people. That is the combined strength of the entire ‘INDI alliance.’ My suggestion to Rahul Gandhi is this: if you wish to debate, you should debate with your ‘so-called’ alliance partner. You claim that Arvind Kejriwal is your friend and that he is part of the ‘INDI alliance.’ Yet, just yesterday, you were the one asserting that if there is any govt that is the most corrupt, it is Arvind Kejriwal’s govt in Punjab. Here in Delhi, you act as if you are brothers, but in Punjab, you label his govt the most corrupt. So, what is the truth? Are you together, or are you separate?… this is something which should be debated…”
— ANI (@ANI) November 5, 2026
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.பி. சம்பித் பத்ரா, “சமீபத்தில், ‘INDI கூட்டணி’ என்று அழைக்கப்படும் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ராம்லீலா மைதானத்தில் கூடினர். அங்கு 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று அவர்கள் கூறினர், ஆனால் உண்மையில் அங்கு 20,000 பேருக்கு மேல் இல்லை. இதுதான் ஒட்டுமொத்த ‘INDI கூட்டணி’யின் பலம்.
ராகுல் காந்தி, நீங்கள் விவாதம் செய்ய விரும்பினால், உங்கள் ‘கூட்டணி’ என்று சொல்லிக்கொள்ளும் தரப்பினருடனேயே விவாதியுங்கள். அரவிந்த் கெஜ்ரிவால் உங்கள் நண்பர் என்றும், அவர் ‘INDI கூட்டணி’யின் ஒரு பகுதி என்றும் கூறுகிறீர்கள். ஆனால், நேற்றுதான், மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம் எதுவென்றால், அது பஞ்சாபில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசாங்கம்தான் என்று நீங்களே கூறினீர்கள்.
டெல்லியில் நீங்கள் சகோதரர்களைப் போல நடந்துகொள்கிறீர்கள். ஆனால் பஞ்சாபில் அவரது அரசாங்கத்தை மிகவும் ஊழல் நிறைந்ததாக முத்திரை குத்துகிறீர்கள். அப்படியானால், உண்மை எது? நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்களா அல்லது தனித்தனியாக இருக்கிறீர்களா? என்பது குறித்துதான் விவாதிக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

