Last Updated:
இந்த மாநாட்டில், அரசியல் தலைவர்கள், அரசு நிர்வாகிகள், தொழில்துறை, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
2027 உத்தரப்பிரதேச தேர்தலில் வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்போம் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 க்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
‘நியூஸ்18 ரைசிங் பாரத் உச்சி மாநாடு – (News18 Rising Bharat Summit – North Edition) நிகழ்ச்சியில் நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடன் கலந்துரையாடிய போது அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஒன்பது ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் முகவரியை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் நாங்கள் செய்த வளர்ச்சிப் பணிகளின் அடிப்படையில் மக்களைச் சந்திப்போம்” என்று யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எதை முன்வைத்து வாக்கு சேகரிக்கும். முந்தைய சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் நிலவிய ‘காட்டாட்சி’ (Jungle Raj), ‘குண்டர் ஆட்சி’ (Goonda Raj), ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கலவரங்கள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருந்தாலும், ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமே உண்மையான ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும்”உண்மையிலேயே ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட அரசியல் கட்சிகள் எவை என்று நீங்கள் பார்த்தால், ஜனநாயக ரீதியிலான கட்டமைப்பைக் கொண்ட மிகச் சில கட்சிகளில் பாஜகவும் ஒன்றாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் தற்போது காணப்படும் இத்தகைய சிறந்த நிர்வாகம், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி அல்லது சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் சாத்தியமாகியிருக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்.
வட இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில், அரசியல் தலைவர்கள், அரசு நிர்வாகிகள், தொழில்துறை, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

