Thursday, November 19, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`முதல்வர் விஜய்யின் மௌனம் அவருக்கே எதிராகத் திரும்பும்' – மேகதாது விவகாரம் விவாதமாவது ஏன்? | அலசல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2026
in அரசியல் செய்திகள்
0
`முதல்வர் விஜய்யின் மௌனம் அவருக்கே எதிராகத் திரும்பும்' – மேகதாது விவகாரம் விவாதமாவது ஏன்? | அலசல்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டி.கே சிவக்குமார் உறுதி!மேகதாது அணை

`மேகதாதுவில் அணைக்கட்டுவது எங்கள் உரிமை. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எனக்கு கவலையில்லை’ என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்துப் பேசக்கூடும் என எதிர்பார்ப்பு இருந்தது.

இது குறித்து முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
துரைமுருகன் எச்சரிக்கை

அப்போது, “அணைக் கட்டுவேன் என சிவக்குமார் அழுத்தமாகச் சொன்னாலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி எந்தக் கொம்பனாலும் அங்கே அணை கட்ட முடியாது. அதே நேரம், அவரின் பேச்சுக்கு ஒன்று எதிர் சவால் விட வேண்டும். இல்லையென்றால், அந்த அமைதியை ஆக்கப்பூர்வமான முறையில், சட்டமன்றத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஆலோசிக்க வேண்டும். இது எதையும் செய்யமாட்டார் என்றால்,  தமிழக மக்களுக்கு இதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். முதலமைச்சருடைய இந்த அமைதி, பெரிய பிரச்னையைக் கொண்டு வந்துவிடும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.

இதற்கிடையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி ஆர் பாட்டீலுடன் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோர் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் Vs மேகதாது Vs பாஜக

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேச மூத்த ஊடகவியலாளர் ப்ரியனை தொடர்புகொண்டோம். அவர், “மேகதாது விவகாரத்தை வெறும் அணை பிரச்னை என்று சுருக்கிவிட முடியாது. இதைச் சுற்றி ஒரு அரசியல் வலை பின்னப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு, ‘மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டி, கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலை காங்கிரஸ் முன்னெடுத்துச் செல்கிறது.

துரைமுருகன்

அதேநேரம், மத்தியில் ஆளும் பா.ஜ.கவோ, இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தங்களுக்குப் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லையென்றாலும், கர்நாடகாவில் வலுவான வாக்கு வங்கியும், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகளும் பா.ஜ.க-வுக்கு உள்ளன. ஆனால், இப்போது அனுமதி வழங்கினால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அணைக் கட்டியதற்கான நற்பெயரைத் கர்நாடக காங்கிரஸ் தட்டிச் சென்றுவிடும் எனவும் யோசிக்கலாம். அதனால், நீதிமன்றத்தின் மூலம் ஏதேனும் உத்தரவு வந்தால் அதனைக் காரணம் காட்டிச் செயல்படலாம் என பா.ஜ.க முடிவு செய்திருக்கலாம்.

மேகதாதுவும் – நீதிமன்றமும்!

இதற்கிடையில், மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு 2018-ம் ஆண்டு ஒரு விரிவான திட்ட அறிக்கையை (DPR) சமர்ப்பித்தது. அதனைத் தொடர்ந்து திருத்தப்பட்ட திட்ட அறிக்கையையும் அளித்தது. இதனை எதிர்த்து 2025-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் இருந்தபோதே தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `இது மிகவும் முன்கூட்டியே (Premature) தொடரப்பட்ட வழக்காக உள்ளது. எந்தவிதமான இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஒரு திட்ட அறிக்கையையே சமர்ப்பிக்கக் கூடாது என்று தடுக்க முடியாது. அந்தத் திட்ட அறிக்கையின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அது உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் அப்போது நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

பிரியன்

2026-ம் ஆண்டு இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், 2026 மே மாதம் அந்த மறுஆய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திட்ட அறிக்கையின் மீது ஏதேனும் இறுதி முடிவு எடுக்கப்பட்டால் மட்டுமே நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இதன் காரணமாக, தற்போது கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையானது எந்தத் தடையுமின்றிப் பரிசீலிக்கக்கூடிய திறந்த நிலையிலேயே உள்ளது. மத்திய அரசு நினைத்தால் அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்ற சூழல் நிலவுகிறது.

நமது உரிமை முக்கியம்!

எனவே, தமிழ்நாடு தவெக அரசு, மத்திய பா.ஜ.க அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், மத்திய அரசு இந்தத் திட்ட அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்து அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டால், அதனை எதிர்த்து நாம் நிச்சயம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ‘ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் (கடைமடை மாநிலங்கள்) சம்மதமின்றி எந்தவொரு அணையையும் கட்ட முடியாது. இது எங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்ற வாதத்தை முன்வைத்து, சட்டப் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் நமக்கு உள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தீர்மானம் என்பது ஒரு முக்கியமான முன்னேற்றம்தான் என்றாலும், வெறுமனே தீர்மானம் நிறைவேற்றியதோடு நம் கடமை முடிந்துவிடவில்லை. அரசியல் ரீதியாக நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் இப்போது டெல்லி சென்றிருப்பதால், சோனியா காந்தியைச் சந்தித்தார், டி.கே.சிவக்குமாரை சந்தித்தார் என்று சொல்வதெல்லாம் இதற்குத் தீர்வாகாது. அங்கெல்லாம் இந்த விவகாரத்தைப் பேசுவதற்கான வாய்ப்புகளே இல்லை. இது மிகவும் தீவிரமான ஒரு பிரச்னை.

முதல்வர் விஜய் மௌனம் ஆபத்து!

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் தொடர் மௌனம் காப்பது தேவையற்ற ஒன்றாகும். முன்பு ஸ்டாலின் எல்லாவற்றிற்கும் கடிதம் எழுதுகிறார் என்று விமர்சிக்கப்பட்டது போல, இப்போது இவரும் பல்வேறு பிரச்னைகளுக்கு வெறுமனே கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் ரீதியான நுணுக்கங்களை முதல்வர் விஜய் இன்னும் முழுமையாகப் புரிந்து வைத்திருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.

இருப்பினும், அரசு அதிகாரிகள் இவருக்கு அனைத்து விவரங்களையும் எடுத்துச் சொல்லியிருப்பார்கள். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எந்த வகையிலும் மேகதாது திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என, ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்
மக்களிடமிருந்து அந்நியப்படுவார்!

மத்திய பா.ஜ.க அரசு எந்த அரசியல் சங்கடத்தைச் சந்தித்தாலும் அது நமக்குக் கவலையில்லை. நமது உரிமைக்கான குரலை நாம் எழுப்பியே ஆக வேண்டும். இதனை அவர் காலதாமதமின்றி உடனடியாகச் செய்ய வேண்டும். இனியும் முதல்வர் விஜய் வாய்மூடி மௌனியாக இருப்பது சரியல்ல. ஒருவேளை, இனியும் இந்த விவகாரத்தில் முதல்வர் தொடர்ந்து மௌனம் காத்தால், அது அவருக்குப் பெரிய அளவிலான அரசியல் சிக்கல்களை உருவாக்கும். பிரதமர் மோடியின் அணுகுமுறை முதல்வர் விஜய்க்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது.

ஏனென்றால் முதல்வர் விஜய் எல்லாப் பிரச்னைகளிலுமே மௌனம் கடைப்பிடித்து வருகிறார். பொதுமக்களைத் தாக்கிய எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ, தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் வன்கொடுமை விவகாரம் என அவர் எதுவும் பேசாமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவே இருக்கிறார். வாய்மூடி மௌனமாக இருப்பதையே தனது பலம் என்று அவர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியே தொடர்ந்து மௌனம் காப்பது ஒரு கட்டத்தில் அவருக்கே எதிராகத் திரும்பும். ஒரு கட்டத்தில் அவர் மக்களிடமிருந்து முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படுவார். ஜனநாயகத்தில் மக்களோடு தொடர்ந்து உரையாடுவதும், பிரச்னைகளுக்கு எதிர்வினையாற்றுவதும் மிக முக்கியம். எனவே, மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் கலைப்பார் என நம்புவோம்.” என்றார்.

மேகதாது விவகாரம்: “முதல்வர் விஜய்யின் இந்தப் போக்கு பெரிய பிரச்னையைக் கொண்டுவரும்” – துரைமுருகன்



.

Previous Post

திருச்சி: நியாய விலைக் கடை அரிசியில் ரூ.22.20 கோடி முறைகேடு; குடும்பமே கைதான பின்னணி என்ன? \ Trichy: Rs 22.20 crore scam involving rice from fair-price shops; what is the story behind arrest of entire family?

Next Post

வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்போம்.. உ.பி. முதல்வர் சிறப்பு பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்போம்.. உ.பி. முதல்வர் சிறப்பு பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து மக்கள் மத்தியில் வாக்கு கேட்போம்.. உ.பி. முதல்வர் சிறப்பு பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In