Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சினையால் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in தமிழ்நாடு செய்திகள்
0
ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சினையால் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக இரு மகள்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானத்தைச் சேர்ந்தவர் முத்துக் குமார் (36). இவரது மனைவி ராமுத் தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), வர்ஷா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். முத்துக் குமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். முத்துக் குமார் குடித்து விட்டு அடிக்கடி ராமுத்தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். அப்போதெல்லாம் குடும்பப் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமுத்தாய் தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் ராமத் தாய் குழந்தைகளுடன் வீட்டிற்கு வராததால் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை தெற்கு தேவதானம் பகுதியில் உள்ள முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இரு உடல்கள் மிதப்பதை கண்ட விவசாயிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராமுத்தாய், வர்ஷா ஆகியோரின் உடல்களை மீட்டு வேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமி நிஷாவின் உடல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரு மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி குழந்தையின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேவதானம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

.

Previous Post

Dindigul Leoni: திண்டுக்கல் லியோனிக்கு ரூ. 2500 அபராதம் – ஏன் தெரியுமா?

Next Post

ஆஸ்திரேலியாவில் லிட்டில் இந்தியா | அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – உலகச் செய்திகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆஸ்திரேலியாவில் லிட்டில் இந்தியா | அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் லிட்டில் இந்தியா | அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - உலகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In