Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரியங்கா மகனின் புகைப்படக் காட்சி; 75 படங்கள் அகற்றம்; `இது ஆட்சியின் பிழை…' – காங்கிரஸ் கண்டனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
பிரியங்கா மகனின் புகைப்படக் காட்சி; 75 படங்கள் அகற்றம்; `இது ஆட்சியின் பிழை…' – காங்கிரஸ் கண்டனம்!
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவின் மகனும் புகைப்படக் கலைஞருமான ரையான் வதேராவின் ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ (No Idea Is Final) என்ற புகைப்படக் கண்காட்சி, டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் நேற்று நடைபெறவிருந்தது. கண்காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அதில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான புகைப்படங்களை அகற்றுமாறு ராஜஸ்தான் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் வற்புறுத்தியதாக ரையான் வதேரா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, “சமீபத்தில் தலைநகரில் நடந்த இளைஞர்களின் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 105 புகைப்படங்களில் 75 புகைப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

View this post on Instagram

இல்லையெனில் கண்காட்சிக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அகற்றச் சொல்லப்பட்ட படங்களில் இந்திய தேசியக் கொடி இடம்பெற்ற இரண்டு படங்களும் அடங்கும். அதில் ஒரு படத்தை நான் இல்லாத நேரத்தில் நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக அகற்றிய நிலையில், இறுதியில் மொத்தம் 74 புகைப்படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. நாட்டைச் சுற்றி நடக்கும் மக்கள் இயக்கங்களையும், மக்கள் ஒன்றாக இணையும் போது உருவாகும் கவிதையையும் தாளத்தையும் கலை ரீதியாகப் பதிவு செய்வதே எமது நோக்கம்.

ஆனால், நேரமும் சூழலும் சரியில்லை. அதனால், இந்த புகைப்படங்களின் உள்ளடக்கம் ‘ஆட்சேபனைக்குரியது’ எனக் கூறி துணை மற்றும் முதன்மை குடியிருப்பு ஆணையர்கள் கூறினர். கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம் யாருக்கும் பறிக்கப்படக் கூடாது.” எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரையானின் தாயாருமான பிரியங்கா காந்தி, “நாட்டின் இளைஞர்களின் குரலை நசுக்க நினைக்கிறார்கள். புகைப்படங்களில் எந்தவித அவதூறான கருத்துக்களோ அல்லது நபர்களைக் காயப்படுத்தும் விஷயங்களோ இல்லை. போராட்டத்தின் நேரடிப் பதிவுகள் மட்டுமே உள்ளன.

பிரியாங்கா காந்தி
பிரியாங்கா காந்தி

அதை நீக்கச் சொல்வதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பது தெளிவாகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா இது குறித்துத் தெரிவிக்கையில், “தேசியக் கொடியின் படத்தைக் கூட அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு தணிக்கை செய்வது கலையின் பிழையல்ல, இந்த ஆட்சியின் பிழை. இந்த அரசு கருத்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும் எந்த அளவிற்கு பயப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் பா.ஜ.க அரசின் கீழ் இயங்கும் பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் தரப்பில் இது குறித்து அதிகாரபூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

’போதைப்பொருள் புழக்கம் குறித்து பேச மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை’ – காங்கிரஸ் காட்டம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb





.

Previous Post

இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கடல்வழி வர்த்தகம் 80-100% அளவுக்கு மீட்பு.. News 18-க்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடல்வழி வர்த்தகம் 80-100% அளவுக்கு மீட்பு.. News 18-க்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

கடல்வழி வர்த்தகம் 80-100% அளவுக்கு மீட்பு.. News 18-க்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிரத்யேக தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In