Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் | Punjab: BJP forms alliance with Akali Dal after 6 years; assembly election race heats up

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2026
in அரசியல் செய்திகள்
0
பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் | Punjab: BJP forms alliance with Akali Dal after 6 years; assembly election race heats up
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளமும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிட்டன. அதில் இரு கட்சிகளுமே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரு கட்சிகளும் கூட்டணியை உடைத்துக்கொண்டன.

தற்போது அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. வரவிருக்கும் பஞ்சாப் தேர்தலுக்காக இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன.

குரு நானக் ஜெயந்தியையொட்டி டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் இந்தக் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.

இது குறித்து பேசிய அமித் ஷா, இந்தக் கூட்டணி குறித்த பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், இந்தக் கூட்டணியை இந்து-சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளம் என்றும் அவர் வர்ணித்தார்.

“பாதலுடன் எங்களுக்கு நீண்டகாலமாக ஆழமான உறவு இருந்து வருகிறது. அதேபோல, பாஜகவிற்கும் அகாலி தளத்திற்கும் இடையிலும் ஒரு வலுவான பிணைப்பு உள்ளது. இந்தக் கூட்டணி பஞ்சாபில் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் இந்து-சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்” என்றார் அமித் ஷா.

டிசம்பர் 2029-க்குள் பஞ்சாப்பை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்ற தனது வாக்குறுதியை அமித் ஷா மீண்டும் வலியுறுத்தியதோடு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க எதுவும் செய்யாததற்காகத் தற்போதைய ஆம் ஆத்மி மற்றும் முன்னாள் காங்கிரஸ் அரசுகளைக் கடுமையாகச் சாடினார்.

தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படாத போதிலும், இந்தக் கூட்டணியில் அகாலி தளம்தான் மூத்த சகோதரர் (பெரிய அண்ணன்) என்றும், முதலமைச்சரும் அந்தப் பஞ்சாப் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்றும் அமித் ஷா தெளிவுபடுத்தினார்.



.

Previous Post

“அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயன்ற முதல்வர் விஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும்” – வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan demands an apology from Chief Minister Vijay for attempting to shield Arul Vignesh

Next Post

தவெக MLA மீது வழக்கு: “4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" – ஸ்டாலின் காட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

தவெக MLA மீது வழக்கு: ``4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" - ஸ்டாலின் காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In