Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவெக MLA மீது வழக்கு: “4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" – ஸ்டாலின் காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 25, 2026
in அரசியல் செய்திகள்
0
`மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு'- தவெக ஆட்சி குறித்து ஸ்டாலின் விமர்சனம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது எனத் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

அருள் விக்னேஷ் - விஜய்
அருள் விக்னேஷ் – விஜய்

போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்குப் பயம் இருந்திருக்கும்.

மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார்.

‘வதந்தி, அய்யோ பாவம், புகார் வந்தால்…’ – கள்ளக்குறிச்சி MLAவுக்கு ஆதரவாக ஒலித்த தவெக குரல்கள்!

அந்தத் தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். ‘த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு – இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி: தவெக MLA-வுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 3 பிரிவுகள்! முழு விவரம்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் | Punjab: BJP forms alliance with Akali Dal after 6 years; assembly election race heats up

Next Post

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ: “கால தாமதம் செய்யாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”- அன்புமணி | pmk anbumani about kallakurichi mla issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணமா? அமைச்சர் யாருடைய குரலாக பேசுகிறார்’ – அன்புமணி| anbumani slams tvk minister rajiv for statement on noyyal river foaming

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ: "கால தாமதம் செய்யாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்"- அன்புமணி | pmk anbumani about kallakurichi mla issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In