Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home சினிமா செய்திகள்

நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in சினிமா செய்திகள்
0
நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம்
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை – கிண்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சரத்பாபு (71), உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். கடந்த ஆண்டு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. செப்ஸிஸ் எனும் நோயால் சரத்பாபு பாதிக்கப்பட்டார். சென்னையில் சிகிச்சை பெற்ற இவர், பிறகு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தொடங்கினார். இம்மாத தொடக்கத்தில் இவரது உடல்நிலை மோசம் அடைந்தது. எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.

சரத்பாபு காலமான செய்தி அறிந்ததும் தெலுங்கு திரையுலகில் அவரது நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணிக்கு அவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சேம்பருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமான ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

திரைப் பயணம்: நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம்பாபு தீக் ஷித்.

போலீஸ் அதிகாரியாக வேண்டும் என விரும்பிய சரத்பாபு நடிகரானார். 1973-ம் ஆண்டில் ராமராஜ்ஜியம் எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி பதித்தார். அதன் பின்னர் தமிழில், இயக்குநர் பாலசந்தர் மூலம் பட்டினப்பிரவேசம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என சுமார் 300 திரைப்படங்கள் வரை நடித்துள்ளார். முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து, சலங்கை ஒலி உள்ளிட்ட படங்களில் இவர்கதாநாயகர்களுக்கு சமமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார். இந்தப் படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

மேலும் நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், சரணம் ஐயப்பா, நெற்றிக்கண், ஆளவந்தான், பாபா உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜி, கமல், ரஜினி, சிரஞ்சீவி என பல உச்ச கதாநாயகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் நடிகை ரமாபிரபாவை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். இதைத்தொடர்ந்து நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்து, பிறகு அவரையும் விவாகரத்து செய்தார்.

.

Previous Post

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் – தனியார் பள்ளிகள் துறை இயக்குநர் உத்தரவு

Next Post

Sarathbabu: `இப்ப அவதிப்படுறதைப் பார்க்க வேண்டாம்!’- சரத்பாபுவின் இறுதி நாட்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sarathbabu: `இப்ப அவதிப்படுறதைப் பார்க்க வேண்டாம்!’- சரத்பாபுவின் இறுதி நாட்கள்

Sarathbabu: `இப்ப அவதிப்படுறதைப் பார்க்க வேண்டாம்!'- சரத்பாபுவின் இறுதி நாட்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In