Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டாக்டராக மாறிய செக்யூரிட்டி; ஓ.பி சீட் வழங்கும் தூய்மை பணியாளர் – கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவலம்| Security Guard Acts as Doctor, Cleaner Issues OP Slips: Karambakudi Govt Hospital Lapses

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
டாக்டராக மாறிய செக்யூரிட்டி; ஓ.பி சீட் வழங்கும் தூய்மை பணியாளர் – கறம்பக்குடி அரசு மருத்துவமனை அவலம்| Security Guard Acts as Doctor, Cleaner Issues OP Slips: Karambakudi Govt Hospital Lapses
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“அரசு மருத்துவமனை என்பது ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் கோயில்” என்பார்கள். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால், “இங்கு சிகிச்சைக்குப் போவதே உயிருக்கு உலை வைக்கும் போலிருக்கிறதே!” என்று பதறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள் செய்ய வேண்டிய சிகிச்சைப் பணிகளைப் பணியாளர்கள் செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, ஒட்டுமொத்த சுகாதாரத் துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கறம்பக்குடி தாலுகாவைச் சுற்றியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கை இந்த அரசு மருத்துவமனைதான். நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 30-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்க வேண்டிய இந்த மருத்துவமனையில், போதிய டாக்டர்களும், செவிலியர்களும் இல்லை என்பது பல ஆண்டுகளாகத் தீராத பிரச்னையாக தொடர்கிறது.

ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தனியார் தூய்மைப் பணியாளர்களை ஓ.பி. சீட்டு வழங்குவது உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தி வந்தனர். சமீபத்தில்தான் இந்தத் தனியார் பணியாளர்களுக்குச் சீருடை கட்டாயமாக்கப்பட்டது.

வைரலான அந்த அதிர்ச்சி வீடியோ!

இந்த நிலையில்தான், தனியார் சீருடை அணிந்த செக்யூரிட்டி பணியாளர் ஒருவர், சற்றும் தயக்கமின்றி டாக்டர் போல நோயாளியைப் பரிசோதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தூய்மைப் பணிகள் செய்பவர் ஓ.பி. சீட் வழங்குவதும், செக்யூரிட்டிகள் டாக்டர் போல நோயாளிகளைப் பரிசோதிப்பதும் என்ன கொடுமை?” என அந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள்.

மக்களின் குமுறலும், அதிகாரிகளின் விளக்கமும்!

“மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதற்காக, முறையான மருத்துவப் பயிற்சியே இல்லாதவர்களை வைத்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது எந்த விதத்தில் நியாயம்? இது அப்பாவிப் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் செயல் இல்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் இந்த உறுதிமொழி வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே கறம்பக்குடி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.



.

Previous Post

நாடு முழுவதும் இன்று 26,000 இடங்களில் சைக்கிள் பேரணி… குஜராத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In