Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: “FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்” – அமைச்சர் நிர்மல் குமார் | FIR against Gem Veeramani registered for purpose of bargaining – Minister Nirmal kumar

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 26, 2026
in அரசியல் செய்திகள்
0
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: “FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்” – அமைச்சர் நிர்மல் குமார் | FIR against Gem Veeramani registered for purpose of bargaining – Minister Nirmal kumar
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “‘ஜெம் வீரமணி வழக்கில் திமுக அரசு அந்த விவகாரத்தைக் கையாண்ட விதம் தவறானது. திமுக இந்த விவகாரத்தில் அதிகமாக எதிர்வினையாற்றுவது, வழக்கில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகிறது.

முன்னாள் அமைச்சர் ரகுபதி, ‘தொடர்புடைய வீடியோ சரியாக இல்லை’ எனக் கூறி கடந்து சென்றுள்ளார். வீரமணியைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீரமணியை மிரட்டி பலர் பணம் பறித்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு உள்ளது.

வீரமணி வழக்கை தவெக அரசு மறைக்க முற்பட்டது என, தான் கூறிய கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் என்னிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விளக்கம் அளிப்பார். வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணி

திமுக ஆட்சியில் தகுதியற்றவர் என நிதித்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் பி.டி.ஆர். தற்போது கட்சியில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை. தொகுதிக்குள் கூட அவர் செல்லாததால்தான் தேர்தலில் தோல்வியடைந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாக அதிமுகவில் இருந்த விசுவாசிகள் அனைவரும் வெளியேறிவிட்டனர். இதே நிலைமை இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கும் ஏற்படும். அதிமுகவும் திமுகவும் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது.



.

Previous Post

வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லையா? வார இறுதி பயணத்தை உறுதி செய்ய இதோ சூப்பர் டிப்ஸ்! | Vande Bharat Ticket Booking Tips: How To Confirm Weekend Travel In 2026

Next Post

அமிர்தசரஸ் தசரா மேளா: பொற்கோவில் தரிசனம் செய்யப் போகிறீர்களா? போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இதோ சில முக்கிய டிப்ஸ்! | Amritsar Dussehra Mela 2026: Golden Temple Traffic Advisory, Parking Rules, And Darshan Guide

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமிர்தசரஸ் தசரா மேளா: பொற்கோவில் தரிசனம் செய்யப் போகிறீர்களா? போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இதோ சில முக்கிய டிப்ஸ்! | Amritsar Dussehra Mela 2026: Golden Temple Traffic Advisory, Parking Rules, And Darshan Guide

அமிர்தசரஸ் தசரா மேளா: பொற்கோவில் தரிசனம் செய்யப் போகிறீர்களா? போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இதோ சில முக்கிய டிப்ஸ்! | Amritsar Dussehra Mela 2026: Golden Temple Traffic Advisory, Parking Rules, And Darshan Guide

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In