Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுடுகாட்டில் வைத்து மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
சுடுகாட்டில் வைத்து மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 28, 2026 9:46 PM IST

ஆந்திராவில், மற்ற ஆண்களுடன் மனைவி பேசுவதைச் சகிக்க முடியாத கணவன், கோடாலியால் வெட்டி மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கொலை செய்து விட்டு விபத்து நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி?.

லலிதா குமாரி - சீதாராம ராஜு
லலிதா குமாரி – சீதாராம ராஜு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம், ராஜம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கொண்டம்பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம ராஜு. இவரது மனைவி லலிதா குமாரி. கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு படிக்க வேண்டும் என விரும்பிய மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சீதாராம ராஜு, அவரைப் பி.டெக் படிக்க வைத்திருக்கிறார். இதன் பலனாக, 2017-ம் ஆண்டு மின்சாரத் துறையில் இன்ஜினியராகப் பணியில் சேர்ந்திருக்கிறார் லலிதா குமாரி.

ஆனால், மனைவியின் இந்த வளர்ச்சியே குடும்பத்தில் பிரச்னைக்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது. பணியின் காரணமாக உடன் வேலை செய்யும் ஆண்களுடன் லலிதா குமாரி சகஜமாகப் பேசுவதை, கணவர் சீதாராம ராஜுவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மற்ற ஆண்களுடன் பேசக்கூடாது என மனைவிக்குக் கட்டுப்பாடு விதித்திருக்கிறார். வேலை சார்ந்த உரையாடல்களைக்கூட தவிர்க்க முடியாத சூழலில் இருந்த லலிதா குமாரிக்கும், சீதாராம ராஜுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மனமுடைந்த லலிதா குமாரி, இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு அவ்வப்போது தனது தாய் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்து வேலைக்குச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் சீதாராம ராஜு, மனைவியுடன் சமாதானம் பேசி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஆனால், இந்தப் பிரச்னை மட்டும் முடிவுக்கு வரவில்லை. மனைவி தனது கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த சீதாராம ராஜு, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்காக வெட்டுக் கோடாலி ஒன்றை வாங்கி, ஊருக்கு வெளியே உள்ள சுடுகாட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருக்கிறார். இந்நிலையில், அக்டோபர் 26-ம் தேதி இரவு மீண்டும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, மறுநாள் காலை தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடப் போவதாக லலிதா குமாரி கூறியிருக்கிறார். இதையடுத்து, மறுநாள் காலையில் தாய் வீட்டுக்குப் புறப்பட்ட மனைவியை, பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றிருக்கிறார் சீதாராம ராஜு. ஆனால், அவர் அழைத்துச் சென்றது, ஏற்கெனவே கோடாலியைப் பதுக்கி வைத்திருந்த சுடுகாட்டுப்பகுதி என்பது மனைவிக்குத் தெரிந்திருக்கவில்லை.

இதையும் படிங்க: “வலிப்பு வந்ததாக நாடகம்… சாவியை பறித்து தப்பினர்..” – கைதிகள் தப்பியது குறித்து சிறைத்துறை விளக்கம்!

குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் ஸ்கூட்டரை நிறுத்திய சீதாராம ராஜு, மறைத்து வைத்திருந்த கோடாலியை எடுத்து வந்து லலிதா குமாரியின் தலையிலேயே சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. பலத்த வெட்டுக்காயமடைந்த லலிதா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். கொலையை மறைக்கத் திட்டமிட்ட சீதாராம ராஜு, மனைவியின் உடலைச் சாலையோரத்தில் போட்டுவிட்டு, அருகில் ஸ்கூட்டரையும் செல்போனையும் வைத்திருக்கிறார். பின்னர், அடையாளம் தெரியாத வாகனம் தங்களது ஸ்கூட்டர் மீது மோதிவிட்டதாகவும், அந்த விபத்தில் மனைவி உயிரிழந்துவிட்டதாகவும் கூறி போலீசாரிடம் நாடகமாடியிருக்கிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், லலிதா குமாரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது தலையில் இருந்த காயங்கள் போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, கணவர் சீதாராம ராஜுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவி உயிரிழந்த நிலையில், தந்தையும் சிறைக்குச் சென்றதால், இந்தத் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மனைவியின் படிப்புக்கு ஆதரவளித்த கணவனே, அவரது வளர்ச்சிக்குப் பிறகு சந்தேகத்தாலும் கட்டுப்படுத்தும் மனப்பான்மையாலும் கொலை செய்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை

Next Post

செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது… என் மகள் உயிருடன் வருவாள்!’ – நெகிழும் சிறுமியின் தாய்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது… என் மகள் உயிருடன் வருவாள்!’ – நெகிழும் சிறுமியின் தாய்

செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது... என் மகள் உயிருடன் வருவாள்!’ - நெகிழும் சிறுமியின் தாய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In