தமிழக முதலமைச்சர் அவர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை ஆண்டுதோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம் நாள், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் நாள், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் நாள் ஆகிய நான்கு தினங்களில் நடத்திட வேண்டும் என ஆணையிட்டுள்ளார்கள்

