Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
இறக்குமதியை தடையை ஏமாற்றி கொண்டுவரப்பட்ட பாகிஸ்தான் பொருள்… பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 24, 2026 3:54 PM IST

நரம்பு மண்டலத்தைப் பாதித்து உயிரைப் பறிக்கக்கூடிய இந்த ஹெராயின், இந்தியாவில் NDPS சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட போதைப்பொருளாகும்

News18
News18

மத்திய இறக்குமதித் தடையை ஏமாற்றி, ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகப் பொய் கணக்கு காட்டி கடத்தி வரப்பட்ட, சுமார் ரூ.2.02 கோடி மதிப்பிலான 25,000 கிலோ பாகிஸ்தான் தயாரிப்பு தர்பூசணி விதைகளை (Watermelon seeds) வருவாய் புலனாய்வு இயக்ககம் (DRI) அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மகாராஷ்டிராவின் நவா ஷேவா (Nhava Sheva) துறைமுகத்தில் வந்திறங்கிய ஒரு சரக்கு கன்டெய்னரை DRI அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

ஆவணங்களில் அவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘முலாம்பழ விதைகள்’ (Muskmelon seeds) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகளின் ஆய்வில் அவை அனைத்தும் தர்பூசணி விதைகள் என்பதும், அவை பாகிஸ்தானிலிருந்து துபாய் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்டவை என்பதும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த இறக்குமதி முயற்சி மத்திய அரசின் இரண்டு முக்கிய வர்த்தகக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியுள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மே 2025 முதல் பாகிஸ்தானில் உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து விதமான பொருட்களின் இறக்குமதி மற்றும் போக்குவரத்துக்கும் இந்தியா முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது.

ஜூலை 2024 முதல் இந்தியாவிற்குள் தர்பூசணி விதைகளை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு முக்கிய விதிகளை மீறி போலியான சான்றிதழ்கள் மூலம் இறக்குமதி செய்ய முயன்றதால், கடந்த 14 ஆம் தேதியன்று அன்று 1962-ஆம் ஆண்டின் சுங்கச் சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த முழுச் சரக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு நடவடிக்கையாக, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகிலுள்ள ஃபாக்வாரா பகுதியில் கடந்த 21 ஆம் தேதியன்று DRI அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5.6 கிலோ ஹெராயின் (Heroin) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நரம்பு மண்டலத்தைப் பாதித்து உயிரைப் பறிக்கக்கூடிய இந்த ஹெராயின், இந்தியாவில் NDPS சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட போதைப்பொருளாகும்



.

Previous Post

‘நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?’ – உண்மை என்ன? |Will Chief Minister Vijay Move Into a Government Bungalow on Greenways Road? What’s the Truth?

Next Post

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" – என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

"திருமாவளவனை முதல்வராக்க நானும் எடப்பாடியும் முயன்றோம்" - என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In