மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், கே.என்.நேருவுக்கு வருவாய் துறையும், தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையும் மற்றும் எஸ்.ரகுபதி தொழில்துறை அமைச்சராகவும் மாற்றப்படவுள்ளனர்.
மா.சுப்பிரமணியத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படவுள்ளது.
ஆவடி நாசர், கயல்விழி ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக டாக்டர் எழிலன், டிஆர்பி ராஜா, தமிழரசி ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படவுள்ளனர்.
டாக்டர் எழிலனுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் தமிழரசிக்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்படும் என கோட்டை வட்டாரத்தில் தகவல்.

