அடுத்து விளையாடிய ஜிம்பாம்வே அணி 1 விக்கெட் இழப்புக்கு 39.3 ஓவர்கள் முடிவில் 246/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பென் கரண்118 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே அணியில் கிரெய்க் எர்வின் 69, பிரையன் பென்னட் 48 ரன்கள் எடுத்தார்கள். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2-1 என ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பென் கரனும் தொடர் நாயகனாக பிரையன் பென்னட்டும் தேர்வானார்கள்.
மற்ற நாட்டு வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடியது போக இங்கிலாந்து வீரர் மற்ற நாட்டுக்கு விளையாடி அசத்தி வருகிறார்.
