கோப்புப்படம்
ஓடும் ரயிலில் குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஸ்ஸாமிலிருந்து தில்லிக்கு சென்றுகொண்டிருந்த சம்பார்க் க்ரண்டி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அளித்த தகவலின்படி, அஸ்ஸாமிலிருந்து தில்லி வந்துகொண்டிருந்த ரயில், பர்ஹான் ரயில் நிலையத்துக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது ஒரு பெட்டியிலிருந்து புகை வெளியேறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க: எல்-1 புள்ளியை வெற்றிகரமாக எட்டிய ஆதித்யா விண்கலம்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
அதன்படி, சம்ரௌலா ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு ரயிலின் பொதுபெட்டியில் குளிர் காய்வதற்காக இரண்டுபேர் வரட்டியைக் கொண்டு நெருப்பு மூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நெருப்பு அணைக்கப்பட்டு பயங்க விபத்து தவிர்க்கப்பட்டது.
நெருப்பு மூட்டிய சண்டன் மற்றும் தேவேந்திரா எனும் இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…
