Last Updated:
ராகுல் பர்வானி மற்றும் சபா குரேஷி ஆகியோர் தன்னை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும், தனது நிறுவனத்தின் கணக்கில் இருந்த பணத்தை அவர்களுக்கு அனுப்ப வலியுறுத்தினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாகக் கூறி இருவர் மிரட்டி பணம் பறித்ததாக இளம் பட்டயக் கணக்காளர் ஒருவர் மும்பையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையின் சாண்டாகிரூஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ் லீலா மோர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பட்டயக் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது தற்கொலை கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில், ராகுல் பர்வானி மற்றும் சபா குரேஷி ஆகியோர் தன்னை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும், தனது நிறுவனத்தின் கணக்கில் இருந்த பணத்தை அவர்களுக்கு அனுப்ப வலியுறுத்தினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் ராஜ் லீலாவின் அந்தரங்க வீடியோக்களை வைத்துக்கொண்டு அவரை மிரட்டி 3 கோடி ரூபாய் பணம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை பறித்தது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீது மிரட்டி பணம் பறித்தல், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த ராஜ் லீலா கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட ராகுல் பர்வானி மற்றும் சபா குரேஷிக்கு ராஜ் லீலா பங்குச்சந்தையில் நிறைய முதலீடுகளை செய்திருப்பதையும், நன்றாக சம்பாதிப்பதையும் அறிந்து வைத்து, அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டே இந்த செயல்களில் ஈடுபட்டதாக போலீசின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக ராஜ் லீலா தனது தற்கொலை குறிப்பில், “மன்னிக்கவும் அம்மா. உங்களுக்கு நான் நல்ல மகனாக இருக்க முடியவில்லை. நான் உங்களைத் தனியாக விட்டுவிட்டு போகிறேன். நான் செய்த செயல்களுக்காக இதை செய்கிறேன். கடவுள் அடுத்த ஜென்மத்தில் என்னைப் போன்ற மகனை உங்களுக்கு ஒருபோதும் தரக்கூடாது. நான் மிகவும் மோசமாக இருந்தேன்.” எனக் கூறியிருக்கிறார்.
Mumbai,Maharashtra
July 08, 2025 3:21 PM IST
“உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடியவில்லை அம்மா” – இளைஞர் விபரீத முடிவு.. கடிதத்தில் குறிப்பிட்ட இருவர்!
