அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்பும், பின்பும் ட்ரம்ப் கடுமையாக சாடி வந்த நாடுகளில் ஒன்று, கனடா.
ஒருகட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வார்த்தை போர்கூட நடந்தது. இந்த நிலையில், நேற்று கனடா பிரதமர் ட்ரூடோ அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு போன் செய்துள்ளார். இந்த அழைப்பு கிட்டத்தட்ட 51 நிமிடங்கள் நீண்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “ஜஸ்டின் ட்ரூடோ, சுங்க வரிகள் குறித்து பேச என்னை அழைத்தார். கனடா மற்றும் மெக்சிகோ எல்லைகள் வழியாக வந்த ஃபென்டனைல் போதைப்பொருள் காரணமாக பலர் இறந்துள்ளனர், மேலும் அது முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டது என்பதற்கான எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை என்று நான் அவரிடம் கூறினேன். நிலைமை சிறப்பாகியுள்ளது என்று அவர் கூறினார், ஆனால் நான், “அது போதுமானதல்ல” என்று சொன்னேன். அந்த அழைப்பு “ஓரளவு” நட்பு முறையில் முடிந்தது! கனடா தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவரால் எனக்குச் சொல்ல முடியவில்லை, இது என்னை ஆச்சரியப்படுத்தியது, இங்கே என்ன நடக்கிறது? பின்னர் அவர் ஆட்சியில் தொடர இந்த பிரச்னையைப் பயன்படுத்த முயற்சிக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். வாழ்த்துக்கள் ஜஸ்டின்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Mar 05, 2025, 1:07 PM ET )Justin Trudeau, of Canada, called me to ask what could be done about Tariffs. I told him that many people have died from Fentanyl that came through the Borders of Canada and Mexico, and… pic.twitter.com/tVYp9awVrX
— Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) March 5, 2025
“கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் நான் தெரிவித்ததாவது, அவரின் பலவீனமான எல்லைக் கொள்கைகளால்தான் நமக்கும் அவர்களுக்கும் இடையே பிரச்னைகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளன. இக்கொள்கைகள் பெரும் அளவில் ஃபென்டனைல் போதைப்பொருளும், சட்டவிரோத குடியேற்றவாசிகளும் அமெரிக்காவுக்குள் புகுவதற்கு வழிவகுத்துள்ளன. இந்தக் கொள்கைகளே பல மக்களின் மரணத்திற்கு காரணமாக உள்ளன.” என்று இன்னொரு பதிவில் கூறியுள்ளார்.
கனடாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொடர்ந்து ஒரு நாடாக சொல்வதில்லை. அமெரிக்காவின் ஒரு மாகாணம் என்றே குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில் ட்ரூடோவை கிண்டல் செய்யும் விதமாக ஆளுநர் என குறிப்பிட்டுள்ளார்.
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Mar 05, 2025, 1:10 PM ET )For anyone who is interested, I also told Governor Justin Trudeau of Canada that he largely caused the problems we have with them because of his Weak Border Policies, which allowed tremendous… pic.twitter.com/fIMGYr2zeJ
— Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) March 5, 2025
