இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் “பா.ஜ.க’வின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, “முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர்” என்று பேசியிருந்தார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், “இந்துக்களும், இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் யோகி ஆதித்யநாத், “முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை. அவர்களின் (அசாதுதீன் ஒவைசி) வாக்கு வங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் புரிந்து கொள்ளும் நாளில், இதுபோன்றவர்கள் தங்களின் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறே வேண்டியது தான்.
