தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 5 நாள்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழையும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Weather warnings for next 7 days (01 Oct- 07 Oct 2024)
Subject: Isolated heavy to very heavy rainfall very likely over northeastern states during next 5 days. Isolated heavy rainfall likely over parts of south Peninsular India during next 3 days.
Press Release dated 01.10.2024… pic.twitter.com/UVMJOpDxsD
— India Meteorological Department (@Indiametdept) October 1, 2024
அதன்படி இன்று அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, தமிழ்நாடு, கேரளம், லட்சத்தீவுகள், கர்நாடகத்தில் இன்று கனமழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரியில் அக். 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக். 2, 3 ஆகிய தேதிகளில் வடகிழக்கு மாநிலங்களில் கன முதல் மிக கனமழையும் அதேபோல அக். 1 முதல் 5 வரை அருணாச்சல பிரதேசத்திலும், அக். 1 முதல் 6 வரை அஸ்ஸாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
