Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கர்நாடக மாநில பா.ஜ., தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடில்லி, கர்நாடக பா.ஜ., தலைவராக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திராவை நியமித்து, அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில், கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த காங்., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பா.ஜ.,விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, கர்நாடக பா.ஜ., தலைவராக இருந்த, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நளின் குமார் கட்டீல், ஆறு மாதங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த ஆறு மாதங்களாக, கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இதே போல், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலும், பா.ஜ., சார்பில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

இந்த இரு பதவிகளை பிடிப்பதில், பா.ஜ., நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், கர்நாடகாவில் மிகப்பெரிய சமூகமான, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், எம்.எல்.ஏ.,வுமான விஜயேந்திராவை, மாநில பா.ஜ., தலைவராக நியமித்து, அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த நபருக்கு, மாநில தலைவர் பதவியை பா.ஜ., வழங்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகிய நிலையில், வாரிசு அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை மீறி, எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, 47, கர்நாடக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தை எடியூரப்பாவின் தொகுதியான ஷிகாரிபுராவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயேந்திரா, முதன்முறை எம்.எல்.ஏ., ஆவார். இளம் தலைவரான இவர், கர்நாடகாவில், வரும் லோக்சபா தேர்தலில், மீண்டும் லிங்காயத் சமூகத்தின் செல்வாக்கை கட்சிக்கு பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றுவார் என கூறப்படுகிறது. எடியூரப்பாவின் மூத்த மகன், பி.ஒய்.ராகவேந்திரா லோக்சபா எம்.பி.,யாக உள்ளார்.

கர்நாடக பா.ஜ., தலைவர் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்ததாக, லிங்காயத் சமூகத்தை சாராத ஒருவர், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரும், எம்.எல்.ஏ.,வுமான பசவராஜ் பொம்மைக்கு அந்த பதவி கிடைக்காது என்பது தெரிகிறது. இவர், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்



.

Previous Post

பிரதமரிடமிருந்து இத்தகைய விமா்சனத்தை எதிா்பாா்க்கவில்லை: அசோக் கெலாட்

Next Post

ஜாதிவாரி கணக்கெடுப்பு புரட்சிகர நடவடிக்கை: ராகுல் காந்தி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜாதிவாரி கணக்கெடுப்பு புரட்சிகர நடவடிக்கை: ராகுல் காந்தி

ஜாதிவாரி கணக்கெடுப்பு புரட்சிகர நடவடிக்கை: ராகுல் காந்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In