Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போக்சோ வழக்கில் சிக்கி ஆஜராகாத எடியூரப்பா..! ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2024 - Updated on June 14, 2024
in அரசியல் செய்திகள்
0
போக்சோ வழக்கில் சிக்கி ஆஜராகாத எடியூரப்பா..! ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்..!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, தனது வீட்டிற்கு உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவரது தாயார் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் 81 வயதான எடியூரப்பா மீது  போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, புகார் அளித்திருந்த சிறுமியின் தாய் மர்மான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எடியூரப்பாவிற்கு சம்மன் அனுப்பியது. ஆனால், டெல்லியில் உள்ள எடியூரப்பா சிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

விளம்பரம்

இதையடுத்து, அவரை கைது செய்ய அனுமதி கோரி, சிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில், அறைக்குள் நடந்த சம்பவங்களை வெளியில் கூற வேண்டாம் எனவும், தேவையான உதவிகளை செய்வதாகவும் எடியூரப்பா கூறியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையும் மீறி வெளியே கூறினால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எடியூரப்பா மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் எடியூரப்பா நான்கு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்துள்ளார். பாஜக தலைமையின் அழுத்தம் காரணமாக 2021 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார்.

தற்போது எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கர்நாடக மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார். கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் நிலையில் அரசியல் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

.

Previous Post

முக்கிய துறைகளின் IAS அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!

Next Post

வந்தே பாரத் உட்பட அனைத்து முன்பதிவுப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் பிரச்னை… எளிய மக்களுக்கான ரயில்கள் எங்கே..?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வந்தே பாரத் உட்பட அனைத்து முன்பதிவுப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் பிரச்னை… எளிய மக்களுக்கான ரயில்கள் எங்கே..?!

வந்தே பாரத் உட்பட அனைத்து முன்பதிவுப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் பிரச்னை... எளிய மக்களுக்கான ரயில்கள் எங்கே..?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In