Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரு மாஸ்க் ரூ.485, ஹாஸ்பிடல் படுக்கைக்கு ரூ.20,000 வாடகை – ரூ.40,000 கோடி ஊழல்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஒரு மாஸ்க் ரூ.485,  ஹாஸ்பிடல் படுக்கைக்கு ரூ.20,000 வாடகை – ரூ.40,000 கோடி ஊழல்..!
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கரோனா பேரிடரின் போது கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, ரூ.40,000 கோடி வரை ஊழல் செய்ததாக அக்கட்சியின் எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு முகக் கவசத்தை ரூ. 485-க்கு கொள்முதல் செய்ததாகவும், மருத்துவமனையில் ஒரு படுக்கைக்கு ரூ. 20,000 வாடகை அளித்ததாகவும் பாஜக எம்எல்ஏ பி.பி.யத்னால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யத்னால் பேசியதாவது:

“கரோனா காலத்தில் பாஜக அரசு மிகப்பெரிய சூழல் செய்தது. ரூ. 45-க்கு விற்பனை செய்யப்பட்ட முகக்கவசத்தை ரூ.485-க்கு கொள்முதல் செய்தனர். சுமார் 10,000 படுக்கைகளை கரோனா மருத்துவமனைகளுக்கு வாடகைக்கு எடுத்தனர். ஒரு படுக்கையின் வாடகை ரூ. 20,000 ஆகும். இந்த தொகைக்கு இரண்டு படுக்கைகளை வாங்கியிருக்கலாம்.

ஒரு நோயாளியின் மருத்துவச் செலவாக ரூ. 10 லட்சம் வரை கட்டணம் செலுத்தப்பட்டது. இதன்மூலம் கரோனா காலத்தில் மட்டும் எடியூரப்பா தலைமையிலான அரசு ரூ.40,000 கோடி ஊழல் செய்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“பாஜக எம்எல்ஏ யத்னாலின் குற்றச்சாட்டே பாஜக அரசுக்கு எதிரான ஆதாரமாகும். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ரூ.4,000 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அதைவிட 10 மடங்கு ஊழல் நடந்துள்ளது.

யத்னால் போகிற போக்கில் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது. ஊழலை ஒழிப்பதில் உறுதியாக இருந்தால், அவர் தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கரோனா ஊழல் குறித்த ஆதாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் பதவியை யத்னா எதிர்பார்த்ததாக கூறப்படும் நிலையில், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை மாநில தலைவராக பாஜக தலைமை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

பாரத் ஜோடோ யாத்ரா 2.0 : இந்தியாவின் மேற்கு முதல் கிழக்கு முனை வரை ராகுலின் அடுத்த பயணம் அறிவிப்பு..

Next Post

இந்திய மல்யுத்த சம்மேளனம்: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்திய மல்யுத்த சம்மேளனம்: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

இந்திய மல்யுத்த சம்மேளனம்: 3 பேர் கொண்ட குழு அமைப்பு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கர்நாடகா மட்டுமல்ல தமிழகத்திலும் உள்ள அமைச்சர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்தார்களோ இல்லையோ ஆனால் சிறப்பாக ஊழல் செய்தார்கள் கர்நாடகாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் யாரும் அதை ஆய்வு செய்யவில்லை என்பதால் வெளியே வரவில்லை இதற்கு மருத்துவத்துறை அதாவது சுகாதாரத்துறை செயலாளர் அவர்களும் அடங்குவார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In