Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹரியானா: அரசை எதிர்த்துப் போராடும் விவசாயிகள்… ஆதரவு தெரிவித்த மல்யுத்த வீரர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஹரியானா: அரசை எதிர்த்துப் போராடும் விவசாயிகள்... ஆதரவு தெரிவித்த மல்யுத்த வீரர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹரியானா மாநிலத்தில் சூரியகாந்தி விதைகளை, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) அரசு கொள்முதல் செய்யவில்லை. அதனால் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.6,400-க்குப் பதிலாக ரூ.4,000-க்கு தனியாருக்கு விற்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இது குறித்து ஆலோசிக்க விவசாயிகளின் மகாபஞ்சாயத்துக் கூட்டம் நடைபெற்றது.

விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகாடி

அதில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,400 வழங்கி, அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஹரியானாவின் குருக்ஷேத்ராவின் சாலைகளில் விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை (NH) மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் உள்ளிட்ட முக்கிய விவசாயத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு மல்யுத்த வீரர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடுபவர்களில் ஒருவரான மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போராட்டத்தில் நேரடியாக பங்குகொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். நாங்களும்கூட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான்.

பஜ்ரங் புனியா

சாலையில் நிற்கும் விவசாயிகளுடன் நாங்கள் நிற்போம். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போதும் விவசாயிகளை ஆதரித்தோம், அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம்” எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஹரியானா காவல்துறை, போராட்டத் தலைவர் உட்பட ஒன்பது பேரைக் கைதுசெய்தனர்.

இன்ஸ்டா பழக்கம்; நைஜீரிய நபரிடம் 1.8 கோடி ரூபாயை இழந்த ஹரியானா பெண்! – என்ன நடந்தது?

.

Tags: அரசஆதரவஎதரததபதரவததபரடமமலயததவரரகளவவசயகள..ஹரயன
Previous Post

Tenkasi Kidnapped Case: தமிழகத்தை உலுக்கிய கடத்தல் விவகாரம் -கிருத்திகாவின் தந்தைக்கு ஜாமீன்

Next Post

முத்திருச்சே.. ஜெயலலிதா பற்றியே தப்பா பேசுறதா? அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முத்திருச்சே.. ஜெயலலிதா பற்றியே தப்பா பேசுறதா? அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக

முத்திருச்சே.. ஜெயலலிதா பற்றியே தப்பா பேசுறதா? அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In