
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வரும் உலக உயரம் குறைந்தவர்களின் விளையாட்டு போட்டிகள் 2023, புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பாட்மின்டன் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
இப்போட்டியில் அவர் பங்கேற்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.2.49 லட்சத்தை அண்மையில் தமிழ்நாடு அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.


