உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை, திருக்குறள் இருக்கை மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை, உலகத் தமிழர் இணைய வழிப் பேரவை – துபாய் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின்கீழ் அஸிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் – இந்தியா, பிரான்ஸ் சர்வதே
ச தமிழ் வானொலி, உகாண்டா தமிழ்ச் சங்கம்,மதுரை திருமாஞ்சோலை பதிப்பகம், கனடா சுவாமி விபுலானந்தர் தமிழ் ஆய்வுகள் மையம் , தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, தமிழ் வலையொலி இதழ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து
இன்று இணைய வழியாக பண்பாடு என்னும் பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக சாதனை நிகழ்ச்சியாக இந்திய நேரம் காலை 9 மணி முதல் இரவு 11 மணிவரை தொடர்ந்து 14 மணிநேரம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, துபாய், இந்தோநேசியா, ஜெர்மனி, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா இலங்ககை, , மாலத்தீவு, டென்மார்க், இத்தாலி, கென்யா, கொரியா, நார்வே , சைனா, நைசீரியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, ஓமன், கத்தார், பக்ரைன், உகாண்டா, குவைத், அயர்லாந்து, பப்புவா நியூ கினியா, மெரிசியஸ், 40 நாடுகளைச் சேர்ந்த 82 க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள்,துனைவேந்தர்கள் . தொழிலதிபர்கள், , நீதிபதிகள், தமிழ்ச் சங்கத் த,லைவர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்விற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் அவர்கள், தலைமை தாங்கினார். நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் போ.சத்திய மூர்த்தி வரவேற்றார்.
நிகழ்வு தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்களது வாழ்த்துச் செய்தியுடன் தொடங்கியது.
நிகழ்வில் . மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜா.குமார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக மேனாள் துனைவேந்தர் பேராசிரியர் என்.பஞ்சநதம் ஆகியோர் விழாப் பேருரையாற்றினர்.
நிறைவு விழாவில் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ. முகமது ஜியாவுதீன்.
(முழு நேர உறுப்பினர், தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம்,
தமிழ்நாடு அரசு) அவர்கள் நிகழ்ச்சியினை தலைமை தாங்க, அவர்கள் முன்னிலையில் அஸிஸ்ட்வேர்ல்ட் ரிக்கார்ட் நிறுவனர் முனைவர் இராஜேந்திரன் அவர்கள் உலக சாதனைச் சான்றிதழை வழங்கினார்கள்.
உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தொடர்ந்து 5 வது முறையாக இந்த உலக சாதனை நிகழ்ச்சி நடந்துள்ளது சிறப்புக்குரியது. விழாவில் நாதஸ்வரம், இன்னிசை, கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் பொம்மலாட்டம் போன்ற தமிழ்ப் பண்பாட்டுக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிறைவாக கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஆ. முகமது முகைதீன் நன்றி கூறினார்.
இந்த உலக சாதனை நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் போ.சத்தியமூர்த்தி ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தனர்.

