2024 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. UN World Population Prospects 2024 அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 145 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 131 கோடி மக்கள்தொகையுடன் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. பொருளாதாரத்தைப் பற்றி பேசுகையில், IMF இன் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டில் 3,937.011 பில்லியன் டாலர் ஜிடிபி மதிப்பீட்டைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
