Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

யாருடன் கூட்டணி..? EPS தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எட்டப்படுமா.?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
யாருடன் கூட்டணி..? EPS தலைமையில் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எட்டப்படுமா.?
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 10ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்பது பற்றி அன்றைய தினம் அறிவிப்பாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான உறவு முழுவதுமாக முறிந்து விட்டது. எந்த வித ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் பாஜக உடன் நெருக்கம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். லோக்சபா தேர்தலில் அமமுக, பாஜக உடன் இணைந்து செயல்பட விரும்புகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதனை வெளிப்படையாகவும் அறிவித்து விட்டார் ஓபிஎஸ்.

லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று முடிவு செய்தால்தான் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேசி முடிவு செய்ய முடியும். வேட்பாளர்கள் பணிகளை தொடங்க முடியும். திமுக லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுகதான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். இந்த ஆண்டு திமுக முந்திக்கொண்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்த அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா? தனித்து போட்டியிடலாமா என்று அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிவார் என்றும் தெரிகிறது.

Previous Post

விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமானது ஜம்மு-காஷ்மீர்!

Next Post

எடப்பாடியாரின் மாஸ் ஐடியா : ஐடி விங் நிர்வாகிகள் குஷி.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எடப்பாடியாரின் மாஸ் ஐடியா : ஐடி விங் நிர்வாகிகள் குஷி.!

எடப்பாடியாரின் மாஸ் ஐடியா : ஐடி விங் நிர்வாகிகள் குஷி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In