Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குண்டும் குழியுமாய் அச்சுறுத்தும் `ராதாபுரம்-காவல்கிணறு' சாலை; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2024
in அரசியல் செய்திகள்
0
குண்டும் குழியுமாய் அச்சுறுத்தும் `ராதாபுரம்-காவல்கிணறு' சாலை;  கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட ராதாபுரம் -காவல்கிணறு சாலை மிகவும் பழுதடைந்து உள்ள நிலையில், இந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வழியே பயணிக்கிறார்கள். சுமார் 13 கிலோ மீட்டர் உள்ள இந்தச் சாலை, பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாய், சில இடங்கள் முழுவதுமாய் பெயர்ந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

ராதாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தங்கள் விவசாய பொருள்களை காவல்கிணறு மார்கெட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடிய விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய  மாணவர்கள், அன்றாடத் தேவைகளுக்குப் பயணிப்பவர்கள் என மக்கள் மிகுந்த அச்சத்தோடு இந்தச் சாலையில் பயணிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சாலை கூடன்குளம் அணுமின் நிலையத்தின் (Emergency evacuation way) அவசர கால வெளியேற்ற வழிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாதையில் இரு சக்கர வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்தப் பகுதி மக்களும், சமூக சேவை அமைப்பினர்களும், பல முறை புகார் அளித்தும் அரசு தரப்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

விபத்துகளுக்கு அச்சாரம் போடும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சாலையை, அதிகாரிகள் உடனடியாகச் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

`வருஷக்கணக்கா குடிதண்ணி வர்றதில்லை..!’ – தண்ணீரின்றி பரிதவிக்கும் V.மங்கம்மாள் பட்டி மக்கள்



.

Previous Post

என்எல்சி-இல் ஐடிஐ, பிளஸ் முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி!

Next Post

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கிருஷ்ணகிரி மாணவி வன்கொடுமை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In