இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியாவும், 2-வது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணியினர் முதலில் பேட்டிங் ஆடி வருகின்றனர்.
இதையும் படிக்க: உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மகர் ஷிவல்கர் காலமானார்!
