Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்? பவன் கல்யாண்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2025
in அரசியல் செய்திகள்
0
தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்? பவன் கல்யாண்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 15, 2025 1:51 PM IST

தமிழ் படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பணம் சம்பாதிப்பதை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தி மொழியை ஏன் எதிர்க்கிறார்கள்? – பவன் கல்யாண்

பவன் கல்யாண்பவன் கல்யாண்
பவன் கல்யாண்

இந்தி மொழியால் வரும் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு இந்தியை எதிர்ப்பதா என்று தெலுங்கு சினிமா முன்னணி நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) மும்மொழி பாடத் திட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த திட்டமானது மறைமுகமாக இந்தி திணிப்பை ஏற்படுத்தும் என தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கடந்த சில வாரங்களாக அனல் பறக்கும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடத்தப்படுகிறது. திமுக தரப்பில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து பரபரப்பான விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் நடத்தினர்.

தேசிய அளவில் மும்மொழிக் கொள்கை விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தெலுங்கு சினிமா முன்னணி நடிகரும், ஆந்திர முதல்வருமான பவன் கல்யான் தெரிவித்துள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆந்திராவின் பிதாபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஜனசேனா கட்சியின் 12 ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்று பவன் கல்யான் பேசியதாவது, 2 மொழிகள் மட்டுமல்ல; இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. மொழிகளின் பன்முகத் தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சமஸ்கிருத மொழியை எதற்காக சிலர் விமர்சிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் படங்கள் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு பணம் சம்பாதிப்பதை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தி மொழியை ஏன் எதிர்க்கிறார்கள்?

இதையும் படிங்க – அரசு போட்ட உத்தரவை கையில் எடுத்த கொள்ளையன்.. அநியாயமாக பல ஆயிரங்களை இழந்த அப்பாவி 

அவர்கள் இந்தி சினிமாவில் இருந்து வரும் பணம் மட்டும் வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்தியை ஏற்றுக் கொள்வதில்லை. இதில் என்ன லாஜிக் இருக்கிறது? என்று பேசினார். பவன் கல்யாணின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளன.

First Published :

March 15, 2025 1:51 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்? பவன் கல்யாண்



.

Previous Post

வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில்லை -டிரம்ப்

Next Post

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In