இந்தியர்களின் காலை பெரும்பாலும் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதல் பற்றிய செய்தியுடன்தான் விடிந்திருக்கும்.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 முகாம்கள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 முகாம்கள் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் 2 முகாம்கள் என 9 பயங்கரவாத முகாம்கள் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தி திரும்பியிருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த அதிரடித் தாக்குதலை இந்தியா நடத்தியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்திய ராணுவம் நடத்திய மிக முக்கிய தாக்குதலாகவும் இந்த சிந்தூர் தாக்குதல் மாறியிருக்கிறது.
