நிகழ்ச்சியை புறக்கணித்தது ஏன்?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அத்திக்கடவு – அவிநாசி திட்ட விழாவை ஏற்பாடு செய்வதவர்கள் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்கள். எங்களை உருவாக்கிய புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப்படங்கள் இல்லை. எங்களிடம் கலந்து இருந்தால் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவேன். டிஜிட்டல் போர்ட் வைத்த பின்னர்தான் எனது கவனத்திற்கு வந்தது. அவருடைய படங்கள் இல்லை என்று சொன்னேன். நான் புறக்கணிக்கவில்லை. அங்கே செல்லவில்லையே தவிர, அத்திக்கடவு – அவிநாசி திட்ட குழுவிடம் நான் இதை சொல்லி உள்ளேன்.” என கூறி இருந்தார்.
