அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிலர், கூட்டமாக எழுந்து தேர்தலின் போது சிறப்பாகப் பணிபுரிந்தும் தாங்கள் வாக்கு எண்ணிக்கை முகவர்களாக ஏன் நியமிக்கவில்லை எனவும், அதற்கான அடையாள அட்டை ஏன் வழங்கவில்லை என கேட்டும் பன்னீர்செல்வத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நடத்திய வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும், பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினரை சமாதானப்படுத்தினர். இதன்பின் கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது. பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த பிரச்சனை குறித்து திருச்சுழி பாஜக ஒன்றிய தலைவர் வெங்கட் என்பவரிடம் பேசினோம். அவர், “‘ஓ.பி.எஸ் ஐயாவுக்காக எங்கள் தொகுதியில் அதிகம் வேலை செய்தோம். இந்நிலையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் வாக்கு மைய முகவர்களாக சேர்த்துள்ளனர். இதில் விடுபட்டவர்கள் தங்களையும் முகவர்களாக நியமிக்க கேட்டுள்ளனர். மற்றபடி எந்த பிரச்னையும் எழவில்லை. கேட்டுக்கொண்ட படி மேலும் இருவர் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

