ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, தாமு, சரவணன், திலீப் ஆகியோர் பேசுகையில்,
“பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது. திமுக SIR யை எதிர்ப்பதாக சொல்கிறது.
நாங்களும் SIR யை எதிர்த்துதானே போராடுகிறோம். பிறகு ஏன் இவ்வளவு இடைஞ்சல்கள்?

நிகழ்ச்சியை நடத்துகிற மா.செக்களை உள்ளே விடவே அத்தனை கட்டுப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுக்கிறார்கள்.பீச் ரோட்டில் வாகனங்களை நிறுத்த விட்டு 3 கி.மீ சுற்றி நடக்கவிடுகிறார்கள்.
அப்படியே நடந்து வந்தாலும் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். தவெக தொண்டர்களென தெரிந்தாலே தடுத்து நிறுத்துகிறார்கள்.
நேற்று இரவு வரை கமிஷனர் அலுவலகத்தில் பேசுகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என உறுதியளித்தனர். இப்போது ஏன் இப்படி தடுக்கிறார்கள்?’ என்றனர்.
மாவட்டச் செயலாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, பின்னர் தொண்டர்கள் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
