அதில், இரு குழுக்களாக பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியது, அவர்கள் பதுங்கியிருந்தது, உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தாக்குதலின்போது 2 செல்போன்களை பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். அந்தச் சம்பவமும் விடியோவில் பதிவாகியுள்ளன. அந்த செல்போன்கள் குறித்த தரவுகளைத் தேடும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இரு செல்போன்களும் பிறகு பயன்படுத்தப்பட்டதா? எங்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது? என்ற கோணத்திலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தில் ஏகே – 47 மற்றும் எம் – 4 ரக துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளடக்கிய உறைகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆப்கன் போர் முடிவுக்கு வந்த பிறகு, எம் – 4 ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தத் தொடங்கியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில், மேலும் ஏதேனும் தகவல்கள் கிடைக்கிறதா? என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த விடியோவின் அடிப்படையில் பார்க்கும்போது, பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் தொழிலாளி யாரோ ஒருவருன் உதவி கிடைத்துள்ளதாகத் தெரிவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவரே பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டி கூட்டம் அதிகமுள்ள இடங்கள் குறித்து கூறியிருக்கக் கூடும் எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த விசாரணையில் தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | சிறுவாணி நீர்போல ஆட்சி… அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
