Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிறைக்குச்சென்ற சந்திரபாபு நாயுடு – வெளியில் இருந்து சாதித்த மகன்! யார் இந்த நாரா லோகேஷ்? – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 10, 2024
in அரசியல் செய்திகள்
0
சிறைக்குச்சென்ற சந்திரபாபு நாயுடு – வெளியில் இருந்து சாதித்த மகன்! யார் இந்த நாரா லோகேஷ்? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு, 50 லட்சம் தொண்டர்களை கட்சியில் சேர்த்து, தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்திருக்கிறார் நாரா லோகேஷ். யார் இவர்?

நாடாளுமன்றத் தேர்தலோடு, ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 2019 தேர்தலில் வெறும் 23 தொகுதிகளை மட்டுமே வென்றெடுத்த தெலுங்கு தேசம் கட்சி, தற்போது இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்ட முக்கிய காரணமாக அமைந்தவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தான்.

விளம்பரம்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற நாரா லோகேஷ், கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போதுதான், 10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் பொறுப்பேற்றிருந்தது.

இதையடுத்து, கட்சி உறுப்பினர்களுடன் உரையாடி, கட்சியின் கொள்கை மற்றும் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் மிகவும் முனைப்புடன் நாரா லோகேஷ் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து ஆந்திரா சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக கடந்த 2017ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாரா லோகேஷ், தொழில்நுட்பத்துறை, பஞ்சாயத்து ராஜ், கிராம மேம்பாடு போன்ற துறைகளோடு, கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
தெலுங்கு தேசம் Vs ஜேடியு : மக்களவை சபாநாயகர் பதவிக்கு போட்டி ஏன்? அதன் அதிகாரம் என்ன?

ஆனால், வாரிசு அரசியல், நேரடி தேர்தலை சந்திக்காமல் அமைச்சர் ஆனவர் என்ற விமர்சனங்களை சந்தித்தார். பின்னர், 2019 சட்டமன்றத் தேர்தலில் மங்களகிரி தொகுதியில், 5,337 வாக்குகள் வித்தியாசத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியும் மாநிலம் முழுவதும் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, தோல்வியால் துவண்டிருந்த தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியூட்ட பல்வேறு நடவடிக்கைகளை நாரா லோகேஷ் மேற்கொண்டார்.

விளம்பரம்

நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்தார். மேலும், மருத்துவ உதவி, பேரிடர் மேலாண்மை, கல்வி உதவி என பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஈர்த்தார். அத்துடன், ஜனவரி 7, 2023 முதல் குப்பம் பகுதியில் யுவா கலாம் பாத யாத்திரையை தொடங்கினார்.

400 நாட்களுக்கு பிறகு சுமார் 4,000 கி.மீ., நடந்த இந்த பாத யாத்திரை, இச்சாபுரம் பகுதியில் நிறைவடைந்தது. இதன் பலனாக, தெலுங்கு தேசம் கட்சியில் புதிதாக, 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனால், கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்திருந்த நேரத்தில், கட்சியை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் நாரா லோகேஷ் ஈடுபட்டார்.

விளம்பரம்

அத்துடன், சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு, கட்சி நிர்வாகிகளுடம் சேர்ந்து வியூகம் அமைத்து களத்தில் இறங்கினார். வெறுமனே சந்திரபாபு நாயுடுவின் கைது நடவடிக்கையை மட்டும் பேசாமல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசின் வேலைவாய்ப்பின்மை, ஆட்சி மீதான நம்பிக்கை இல்லா தன்மை போன்ற முக்கிய காரணங்களையும் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டு சேர்த்தார். இதன் பலனாக, 175 தொகுதிகளை கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. அத்துடன், மங்களகிரி தொகுதியில், 91,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நாரா லோகேஷ், தற்போது ஆந்திர அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளார்.

.



.

Previous Post

Weather Update: ’ஜூன் வந்தும் விடவில்லை! தமிழ்நாட்டில் அதிகரிக்க போகும் வெப்பநிலை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Next Post

40 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற / புதுப்பிக்க புது நிபந்தனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
40 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற / புதுப்பிக்க புது நிபந்தனை!

40 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற / புதுப்பிக்க புது நிபந்தனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In