ரேகாவின் எக்ஸ் தள பதிவு
மேலும், அரசியலில் தனது மனைவிக்கு முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறார். சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ரேகா பாஜகவுக்கு நன்றி தெரிவித்து, ‘எக்ஸ்’ இல் ஒரு பதிவில், ‘‘என்னை நம்பி, முதலமைச்சர் பதவியை எனக்கு வழங்கியதற்காக அனைத்து உயர் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு புதிய ஆற்றலையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. டெல்லியின் ஒவ்வொரு குடிமகனின் நலன், அதிகாரமளித்தல் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக நான் முழுமையான நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், பணியாற்றுவேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன். டெல்லியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல இந்த முக்கியமான வாய்ப்புக்காக நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பேன்,’’ என்று அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
