Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

யார் போகலனா என்ன ?.. நாங்க போவோம்..!எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு.. அந்தப் பக்கம் ஓபிஎஸ்ஸும் ரெடியாம்!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள்
0
யார் போகலனா என்ன ?.. நாங்க போவோம்..!எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு.. அந்தப் பக்கம் ஓபிஎஸ்ஸும் ரெடியாம்!!
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை : காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ள நிலையில் அதிமுக சார்பில் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் முன்னாள் சபாநாயகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

குடியரசுத் தலைவரையும், குடியரசு துணைத் தலைவரையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டாக இன்று அறிவித்தன. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மதிமுக, விசிக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், “புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல” எனக் கூறியிருந்தார்.

நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மே 28ஆம் தேதி நடைபெறும் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் கலந்து கொள்ள இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களே.. புது ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிட்டீங்களா.. ஆபீசர்களுக்கு பறந்த மெயின் உத்தரவு மேலும், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த எம்.பிக்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஆர்.தர்மர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 19 எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக இந்த திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்கிறது.

.

Previous Post

சரியான வீட்டுக் கடனை தேர்வு செய்வது எப்படி.. கவனத்தில் கொள்ள வேண்டிய 5 காரணிகள்!

Next Post

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து 

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து 

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In