வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
‘மோடி மீண்டும் பிரதமராக வரக் கூடாது; வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது, தி.மு.க.,வின் குறிக்கோள். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்’ என, ஏற்கனவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
‘மோடி மீண்டும் பிரதமரானால், தி.மு.க., அமைச்சர்கள்,
எம்.பி.,க்கள் மீதுள்ள வழக்குகள் வேகம் பிடிக்கும். மேலும், சில தலைவர்கள் மீது வழக்குகள் தொடரப்படும். எனவே, அவர் தோற்க வேண்டும்’ என்பது, தி.மு.க.,வின் திட்டம். ஆனால், இந்த அளவு வேகத்துடன், கூட்டணி கட்சியான காங்கிரஸ் செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ‘இண்டியா’ கூட்டணி துவங்கி விட்டாலும், அதில் ஏராளமான பிரச்னைகள். கூட்டணி தொடர்வதில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லையோ என சந்தேகப்படுகின்றனர், தி.மு.க., தலைவர்கள்.
இதற்கிடையே, புதுடில்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் ஒரு செய்தி பரபரப்பாக அடிபடுகிறது… அது, ‘அடுத்த மாத இறுதிக்குள் தி.மு.க., அமைச்சர்கள் மூன்று
பேர் மீது நடவடிக்கை பாயும்; ‘ரெய்டு’ நடைபெறலாம்’ என்பது தான் அந்த செய்தி. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். யார் அந்த மூன்று பேர்? வாய் திறக்க
மறுக்கின்றனர் அதிகாரிகள். டிசம்பர் மாதம் மீடியாவிற்கு ஒரு டிராமா காத்திருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

